புதன், 4 பிப்ரவரி, 2015

திருக்குறள் - ஒழுக்கமுடைமை, காலமறிதல்



இலக்கணக் குறிப்பு :

ஒழுக்கம் - தொழிற்பெயர்

சொலல் - தொழிற்பெயர்
 
காக்க - வியங்கோள் வினைமுற்று

புரிந்து, தெரிந்து - வினையெச்சங்கள்

அறிந்து - வினையெச்சம்

கலங்காது - எதிர்மறை வினையெச்சம்
 இழிந்த பிறப்பு - பெயரச்சம்

உடையான் - வினையாலனையும் பெயர்

உரவோர் - வினையாலனையும் பெயர்

எய்தாப் பழி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எய்துவர் - பலர்பால் வினைமுற்று

நல்லொழுக்கம், தீயொழுக்கம் - பண்புத்தொகைகள்
 
அருவினை - பண்புத்தொகை


படும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று





பிரித்தெழுதுக :

புரிந்தோம்பி - புரிந்து + ஓம்பி

தெரிந்தோம்பி - தெரிந்து + ஓம்பி


பொருளறிதல் :

அழுக்காறு - பொறாமை
ஆக்கம் - செல்வம்
கூகை - கோட்டான்
இகல் - பகை
ஏதம் - குற்றம்
எய்துவர் - அடைவர்
இடும்பை - துன்பம்
வித்து - விதை
திரு - செல்வம்
தீராமை - நீங்காமை
ஞாலம் - உலகம்
பொருதகர் -ஆட்டுக்கடா
ஒள்ளியவர்  - அறிவுடையவர்
செறுநர் - பகைவர்
சுமக்க - பணிக
இறுவரை - முடிவுக்காலம்
கிழக்காந்தலை - தலைகீழ் (மாற்றம்)

1. பிறப்பொக்கும் எலலா உயிர்க்கும் என்னும் பொதுநெறி காட்டியவர் திருவள்ளுவர்.

2. தைத்திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள்.

3. திருக்குறள் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.

4. அறம்,பொருள்,இன்பம் என முப்பாலாகப் பகுக்கப்பட்டுள்ளது.

5. ஒன்பது இயல்களையும் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களையும், ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் கொண்டு விளங்குகிறது.

6. தமிழ்ச் சான்றோர் பலரால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை, திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் புகழ்கிறது.

7. திருக்குறள் குறள் வெண்பாக்களால் ஆன நூலாகும்.

’வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’

- பாவேந்தர் பாரதிதாசன்



மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக