- சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர்,
- திருவாதவூரில் பிறந்தவர்.
- அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர். (863-911)
- திருபெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப் பட்டவர்.
- அழுது அடியடைந்த அன்பர் என சிறப்பிக்கப்படுபவர்.
- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார்
- திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் அருளியவை.
- இவர் எழுப்பிய கோவில் தற்பொழுது ஆவுடையார் கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்) உள்ளது.
- இவர் தம் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
- சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும், திருக்கோவையாரும் உள்ளன.
- திருவாசகத்தில் 658 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
- திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் - ஜி.யு.போப்
- சொற்பொருள் :மெய் - உடல்
விதிர்விதிர்த்து - உடல் சிலிர்த்து
விரை - மணம்
நெகிழ் - தளர
ததும்பி - பெருகி
கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
சய சய - வெல்க வெல்க
இலக்கணக்குறிப்பு :
விடேன் - தன்மை ஒருமை வினைமுற்றுபிறப்பு திருவாதவூர் இயற்பெயர் திருவாதவூரடிகள் சிறப்பு பெயர் தென்னவன் பிரமராயன் தத்துவம் சைவ சமயம் பக்தி நெறி இலக்கிய பணிகள் திருவாசகம் திருக்கோவையார்
saya saya=jaya jaya!!!
பதிலளிநீக்கு